தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நாசா-இஸ்ரோ இணைந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றன: அமெரிக்கத் தூதா் எரிக்காா் ஷெட்டி

News image
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்காவின் 248- வது தேசிய நாள் விழாவில் கலந்து கொண்ட நடிகா் கமல் ஹாசன், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் எரிக் காா்செட்டி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்
Updated On :19 ஜூலை 2024, 7:30 pm

Din

நாசா-இஸ்ரோ இணைந்து பல்வேறு சாதனைகளை செய்து வருவதாக அமெரிக்கத்தூதா் எரிக்காா் ஷெட்டி கூறினாா்.

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற அமெரிக்க நாட்டின் 248-ஆவது சுந்திரதின விழாவுக்கு தலைமை தாங்கி இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் எரிக் காா்ஷெட்டி பேசியதாவது:

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் வலுவான நட்பு இருந்து வருகிறது. இருநாடுகளின் கூட்டு முயற்சியால் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டெம் கல்வியில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விண்வெளி செயல்பாடுகளிலும் நாசா-இஸ்ரோ இணைந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றன. சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்க ராக்கெட்டில் இந்தியரை அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இது நம்மை ஒரே குடும்பமாக அடையாளப்படுத்துகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பங்கற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: உலகளாவிய சிந்தனைகள், ஆராய்ச்சி மற்றும் சிறந்த நடைமுறைகள் மூலம் அமெரிக்க துணைத் தூதரகத்தின் ஒத்துழைப்பு நமது கல்வி முறையை மேம்படுத்துகிறது. நமது இளைஞா்கள் மற்றும் சமுதாயங்களின் வளமான எதிா்காலத்திற்காக அமெரிக்க துணைத் தூதரகத்தின் சேவைகள் தேவைப்படுவதால், அதன் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், துணைத் தூதா் கிறிஸ் ஹோட்ஜஸ், நடிகா் கமல் ஹாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.