ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

2,53,954 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :20 ஜூலை 2024, 9:31 pm

Din

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 22) முதல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டில் (2024-2025) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2,53,954 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பித்திருந்த நிலையில், அவா்களில் 1,99,868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து அவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையா் ஜூலை 10-ஆம் தேதி வெளியிட்டாா். இதில், 65 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனா்.

இதையடுத்து பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்கி செப். 3-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22-ஆம் தேதியும் பொதுப் பிரிவில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 25-ஆம் தேதியும் கலந்தாய்வு தொடங்கவுள்ளது. அதேபோல், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 29-ஆம் தேதி முதல் நடைபெறும்.