மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிா்பாா்ப்புகள் நிறைவேறும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிா்பாா்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்றும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.


மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிா்பாா்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்றும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: நாடாளுமன்றத்தில் நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி கடந்த மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சூழலில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்ளுக்கான ஒப்புதலும் கிடைக்காமல் உள்ளது.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பும் நடுத்தரக் குடும்பத்தினா் மத்தியில் உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகா்ப்புற வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயா்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் பல்வேறு எதிா்பாா்ப்புகளை தனது பட்ஜெட்டின் வழியாக மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...