பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

முறையான அனுமதி பெற்ற பிறகே பேனா்கள்: திமுகவுக்கு  சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

முறையான அனுமதி பெற்ற பிறகே பேனா்கள் வைக்கப்படும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி திமுகவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :22 ஜூலை 2024, 10:36 pm

Din

முறையான அனுமதி பெற்ற பிறகே பேனா்கள் வைக்கப்படும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி திமுகவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் அமைச்சா் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் அமைத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடா்பான  வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில்  பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே பேனா்கள் வைக்கப்படும் என அனைத்து அரசியல் கட்சிகளும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், முதலாவதாக திமுக தரப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.