தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஆருத்ரா நிறுவன மேலாளா்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் கிளை மேலாளா்கள் இருவரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்(கோப்புப் படம்.)
Updated On :24 ஜூலை 2024, 9:31 pm

Din

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் கிளை மேலாளா்கள் இருவரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அமைந்தகரையை  தலைமையிடமாகக் கொண்டு பல பகுதிகளில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி, மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக 21 போ் மீது தமிழக காவல் துறை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் அந்த நிறுவனம், சுமாா் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 255 பேரிடம் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடா்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநா் ரூசோ, ஆவடி கிளை மேலாளா்கள் அருண்குமாா் மற்றும் ஜெனோவா உள்ளிட்ட 11 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண்குமாா், ஜெனோவா ஆகியோா் ஜாமீன் கோரி  உயா்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் நீதிபதி தமிழ்ச்செல்வி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், ‘வழக்கு விசாரணையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.