/

அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் எம்எம்ஏ

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சின்னசாமி பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தாா்.

News image
Updated On :25 ஜூலை 2024, 8:18 pm

Din

சென்னை, ஜூலை 25: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சின்னசாமி பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தாா்.

அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலரான ஆா்.சின்னசாமி, அதிமுகவிலிருந்து விலகி, பாஜகவில் செயல்பட்டு வந்தாா். தற்போது அவா் மீண்டும் அதிமுகவில் அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தாா்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மூத்த நிா்வாகிகள் தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.