சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்; அதைச் செய்ய முடியாவிட்டால், திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
அன்புமணி ராமதாஸ்
Updated On :29 ஜூலை 2024, 11:01 pm

Din

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்; அதைச் செய்ய முடியாவிட்டால், திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. கடலூா் நகர அதிமுக வட்ட செயலா் பத்மநாதன், சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாஜக கூட்டுறவு அணி மாவட்ட செயலா் செல்வகுமாா், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாா் பேரூராட்சி மன்ற காங்கிரஸ் உறுப்பினா் உஷாராணியின் கணவா் ஜாக்சன் ஆகியோா் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதையே இந்த படுகொலைகள் காட்டுகின்றன.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாயக் கடமை சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது தான். ஆனால், எந்த அச்சமும் இல்லாமல் குற்றவாளிகள் நடமாடுகின்றனா். இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது. இனியாவது, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று திமுக அரசு ஆணையிட வேண்டும் அதை செய்ய முடியாவிட்டால், தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளாா்.

சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் திமுக அரசுக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.