வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தலா?
வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்டது குறித்து காவல்துறை விசாரணை

அரசு மருத்துவமனை
Center-Center-Chennai

அரசு மருத்துவமனை
Center-Center-Chennai
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியைச் சேர்ந்த சின்னு-கோவிந்தன் தம்பதியருக்கு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை திருடப்பட்டதாக காவல்துறைக்கு புகார் வந்தது.
கடந்த 27ஆம் தேதி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட சின்னு என்ற பெண்ணுக்கு 27ஆம் தேதி இரவு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
அதன் பின் குழந்தை நல வார்டுக்கு சின்னு உடன் குழந்தையையும் மாற்றி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் சின்னுவின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது குழந்தை அழுததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குழந்தையை பார்த்துக் கொள்வதாகக் கூறி சின்னுவிடம் குழந்தையை வாங்கி கடத்திச் சென்றுள்ளார் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குழந்தை கடத்தல் குறித்து காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...