
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், ஒரு இளம் விவசாயி காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கீழ் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில், சுஜில்குட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடாச்சலம் (25) என்பவர் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) இரவு பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க தனது விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளார்.
பின்னர் நள்ளிரவில், அதாவது சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில், காட்டுயானை ஒன்று விவசாய நிலத்திற்குள் நுழைந்து, பூசணிக் கொடிகளை நாசம் செய்துள்ளது. இதனைப் பார்த்த வெங்கடாச்சலம் காட்டுயானையை விரட்ட முயன்றுள்ளார். ஆனால், யானை வெங்கடாச்சலத்தை பலமாகத் தாக்கியுள்ளது. வெங்கடாசலத்தின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, யானையை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் வெங்கடாச்சலத்தை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர். இருப்பினும் வெங்கடாச்சலம் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.