சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

குரூப் 4 தேர்வு: அதிகாரபூர்வ விடைக் குறிப்பு வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைக் குறிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டது.

News image
Updated On :18 ஜூன் 2024, 12:31 pm

DIN

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைக் குறிப்பை (ஆன்சர் கீ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (ஜூன் 17) வெளியிட்டுள்ளது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. எனினும் இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர்.

சென்னையில் மட்டும் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

https://tnpsc.gov.in/english/answerkeys.aspx என்ற இணையப் பக்கத்தில் விடைக் குறிப்புகள் குறித்து அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.