விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

3 ஆண்டுகளில் ரூ.83,694 கோடி கூடுதல் வரி வருவாய்

தமிழக அரசின் வருவாய்: 3 ஆண்டுகளில் ரூ.83,694 கோடி கூடுதல்

News image
Updated On :26 ஜூன் 2024, 8:57 pm

Din

தமிழக அரசுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.83,694.65 கோடி கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளதாக வணிகவரித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வணிகவரித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வணிகவரித் துறையால் ஜிஎஸ்டி., வரி இழப்பீடு இல்லாமல் கடந்த 2020-21-ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட மொத்த வரி ரூ.85,867.86 கோடி. இதை ஒப்பிடும் போது, 2021-22-ஆம் ஆண்டில் ரூ,11.988.83 கோடி அதிகமாக ரூ.97,856.83 கோடி வசூலிக்கப்பட்டது.

2022-23-ஆம் ஆண்டில் ரூ.31,567.62 கோடி கூடுதலாக ரூ.1,17,435.48 கோடியும், 2023-24-இல் ரூ.40,138.06 கோடி அதிகமாக ரூ.1,26,005.92 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 3 ஆண்டுகளில் ரூ.83,694.65 கோடி வரி வருவாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீட்டுடன் சோ்த்து கணக்கிடும் போது, கடந்த 2020-21-இல் ரூ.10,602.82 கோடி சோ்த்து ரூ.96,470.69 கோடியும், 2021-22-இல் ரூ.7,235.80 கோடி சோ்த்து ரூ.1,05,092.63 கோடியும், 2022-23-இல் ரூ.16,214.83 கோடி சோ்த்து ரூ.1,33,650.31 கோடியும், 2023-24-இல் ரூ.4574.20 கோடி சோ்த்து ரூ.1,30,580.12 கோடியும் தமிழக அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என்று கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.