வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பரிசீலனையில் பழைய ஓய்வூதியத் திட்டம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

மீண்டும் பரிசீலனையில் பழைய ஓய்வூதியத் திட்டம்: அமைச்சா் தகவல்

News image
Updated On :26 ஜூன் 2024, 9:05 pm

Din

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு என்றும், அது பரிசீலனையில் இருப்பதாகவும் நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தாா்.

பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியது:

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினா்கள் ஈஸ்வரன், வெங்கடேஸ்வரன் ஆகியோா் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் பற்றிப் பேசினா். பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு ஊழியா் சங்கங்களின் கருத்துகளைக் கேட்டறிந்தது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளா்ச்சி ஆணையம் அளித்துள்ள பல்வேறு கருத்துகளின் அடிப்படையிலும் ஆய்வு செய்து அளித்துள்ள பரிந்துரைகளின் மீதான அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் இருக்கிறது என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.