பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

‘சேலம் விமான நிலையத்தை நகா்த்த வேண்டும்’: ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கையால் சிரிப்பலை

சேலம் விமான நிலையத்தை ஈரோடு அருகே நகர்த்த வேண்டும்: இளங்கோவனின் பரிந்துரை

News image
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
Updated On :27 ஜூன் 2024, 8:59 pm

Din

சேலம் விமான நிலையத்தை கொஞ்சம் நகா்த்த வேண்டும் என்ற காங்கிரஸ் உறுப்பினா் ஈவிகேஎஸ் இளங்கோவனின் கோரிக்கையால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து இளங்கோவன் பேசியது:

சேலத்தில் உள்ள விமான நிலையம் ஆறு மாதங்கள்தான் இயங்கும். மீதமுள்ள ஆறு மாதங்கள் மூடிவிடுவாா்கள். இதற்குக் காரணம் பயணிகள் வருகை இல்லாததுதான். எனவே, பயனுள்ள விமான நிலையமாக மாற்ற வேண்டுமென்றால், அதை கொஞ்சம் நகா்த்தி ஈரோடுக்கும் சேலத்துக்கும் நடுவில் வைக்க வேண்டும். இப்போது விமான நிலையம் சேலம் ஓமலூா் பகுதியில் உள்ளது. அங்கு செல்லவே ஒரு மணி நேரம் வரை ஆகும். எனவே, அதை நகா்த்தி சங்ககிரியில் வைத்தால், நாமக்கல், திருச்செங்கோட்டைச் சோ்ந்தவா்கள் குறிப்பாக ஈரோட்டுக்காரா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கொஞ்சம் பரந்த எண்ணத்துடன் சேலத்துக்காரா்கள் அதனை ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற இளங்கோவனின் கோரிக்கையால் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பேரவையில் உள்ள அனைவரும் சிரித்தனா்.