மாஞ்சோலை விவகாரம்: பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்
பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்
பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்

சென்னை: மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் சிந்தனைச் செல்வம், மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான நோட்டீஸ் அளித்தார்.

காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை மற்றும் பாஜகவின் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தீர்மானத்தை அளித்தனர்.

அதில், மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு சிறப்புக் குழு அமைக்க வேண்டும். உயர் நீதிமன்றம் தற்காலிக தீர்வை அளித்துள்ளது. நிரந்தர மறுவாழ்வு ஏற்படுத்தித் தரக் கோரிக்கை வைத்து பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கோவை பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளர்கள்,கடந்த நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இங்குள்ள பிபிடிசி தேயிலை நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேயிலைத் தோட்டங்களில் 700 குடும்பங்களைச் சோ்ந்த 2,150 தொழிலாளா்கள் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில்தான், இந்த நிறுவனத்தின் 99 ஆண்டுகள் குத்தகைக் காலம் 2028-ஆம் ஆண்டுடன் நிறைவடையவிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானிது. இதைத் தொடா்ந்து, இந்த நிலம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, அரசிடம் வழங்கப்பட உள்ளதால், மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

சட்ட சிக்கல்களால் பாதிக்கப்படாமல் இருக்க, குத்தகைக் காலம் நிறைவடைவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com