ரூ.58.33 கோடியில் கடப்பாக்கம் ஏரியை புனரமைப்பு செய்ய முதல்வர் உத்தரவு!

கடப்பாக்கம் ஏரியை ரூ.58.33 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.58.33 கோடியில் கடப்பாக்கம் ஏரியை புனரமைப்பு செய்ய முதல்வர் உத்தரவு!

சென்னை: ஆசிய வளர்ச்சி வங்கியின், உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி மானிய நிதியில் கடப்பாக்கம் ஏரியை ரூ.58.33 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பருவ மழை காலங்களில் பெருவெள்ள பாதிப்பை கட்டுப்படுத்தவும், மழை நீர் கடலில் சென்றடைவதை தடுத்து நீர்நிலைகளில் சேமிப்பதற்காகவும், பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நீர் நிலைகளை சீரமைத்து காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணியின் ஒரு பகுதியாக ஆசிய வளர்ச்சி வங்கி, உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி மானிய நிதியில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிக்கு ரூ.58.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணியில், ஏரியினை தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலபடுத்தி, ஏரியின் கரையை உயர்த்தி அமைத்து ஏரியின் கொள்ளளவு மூன்று மடங்காக அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரூ.58.33 கோடியில் கடப்பாக்கம் ஏரியை புனரமைப்பு செய்ய முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள்: முதல்வர் ஸ்டாலின்

இந்த புனரமைப்பு பணியில் மதகுகளை சீரமைத்தல், பல்லுயிர் வாழ்விடங்களை மேம்படுத்துதல் பொது மக்கள் பயன்பாட்டிற்காக, ஏரியின் கரையில் பசுமை தோட்டம் மற்றும் நடைபாதை அமைத்தல், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணியினால் ஏரியினை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்குவது தவிர்க்கப்படும்.

மேலும் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணியினால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சீரான பாசன வசதி செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com