2,500 எண்ணிக்கையில் ரூ.10 நாணயங்கள் வழங்கி சுயேச்சை வேட்புமனு!

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், 2,500 எண்ணிக்கையில் பத்து ரூபாய் நாணயங்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சையால் பரபரப்பு ஏற்பட்டது.
2,500 எண்ணிக்கையில் ரூ.10 நாணயங்கள் வழங்கி சுயேச்சை வேட்புமனு!

நாமக்கல் அருகே மேற்கு பாலபட்டியைச் சேர்ந்தவர் காந்தியவாதி தி.ரமேஷ்(43). இவர் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளார்.

2006 செல்லப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் முதல் 2023 ஈரோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரையில், பத்து முறை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

2,500 எண்ணிக்கையில் ரூ.10 நாணயங்கள் வழங்கி சுயேச்சை வேட்புமனு!
அதிமுக கூட்டணியில் தேமுதிக: வேட்பாளர்கள் அறிவிப்பு!

2024 மக்களவைத் தேர்தலில் நாமக்கல் மற்றும் வாரணாசி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கிய நிலையில், காந்தி வேடமிட்டு நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 2,500 எண்ணிக்கையில் பத்து ரூபாய் நாணயங்களுடன், ரூ.25,000 வைப்புத் தொகையுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com