கமல்ஹாசன் தேர்தல் சுற்றுப்பயண விவரம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29ஆம் தேதி முதல் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மக்களவைத் தேர்லில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது. ஆனால், தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என கட்சித் தலைவர் கமல்ஹாசன் அதிரடியாக அறிவித்தார். இருப்பினும், திமுக கூட்டணிக்காக தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்காக பிரசாரம் மேற்கொள்வேன் என அவர் தெரிவித்தார்.

மக்களைவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு தொகுதி ஒதுக்கப்படாத நிலையிலும், திமுக சார்பில் ஒரு மாநிலங்களவை மட்டும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29ஆம் தேதி முதல் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதன்படி மார்ச் 29-ஈரோடு, மார்ச்30-சேலம், ஏப்ரல்2-திருச்சி, ஏப்ரல் 3-சிதம்பரம், ஏப்ரல் 6-ஸ்ரீபெரும்புதூர், சென்னை, ஏப்ரல் 7- சென்னை, ஏப்ரல் 10-மதுரை, ஏப்ரல் 11-தூத்துக்குடி, ஏப்ரல் 14-திருப்பூர், ஏப்ரல்15-கோவை, ஏப்ரல் 16- பொள்ளாச்சி ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com