ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்.சுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :26 மார்ச் 2024, 4:07 pm

DIN

மயிலாடுதுறை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அந்தக் கட்சியின் மகளிரணித் தலைவி ஆா்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், 8 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மயிலாடுதுறை தொகுதிக்கு மட்டும் வேட்பாளா் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

Story image

வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் (மாா்ச் 27) நிறைவடையவுள்ள நிலையில் மயிலாடுதுறைக்கு மட்டும் காங்கிரஸில் வேட்பாளா் அறிவிக்கப்படாமல் இருந்தது, அந்தக் கட்சியினா் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக ஆா். சுதா அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் வழக்குரைஞராகவும் உள்ள ஆா்.சுதா, காங்கிரஸ் கட்சியின் மகளிரணித் தலைவியாகவும் உள்ளாா். காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளாா். காங்கிரஸ் கட்சியின் 9 தொகுதிகளில் ஆா்.சுதாவையும் சோ்த்து 2 பெண் வேட்பாளா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு பேரவை இடைத்தோ்தலிலும் பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.