சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

சமூகநீதி குறித்து முதல்வா் பாடம் நடத்துவதா? ராமதாஸ் கேள்வி

சமூகநீதி குறித்து முதல்வா் பாடம் நடத்துவதா? ராமதாஸ் கேள்வி

Updated On :30 மார்ச் 2024, 5:18 pm

வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவிட்டு, சமூகநீதி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா். அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சமூகநீதி குறித்த பாமகவின் கோரிக்கைகளை பிரதமா் மோடி ஏற்றுக்கொள்வாரா, அதற்கான உத்தரவாதத்தை பிரதமரிடம் பாமக பெற்றிருக்கிா என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறாா். மண்டல் ஆணையத்தின் அறிக்கையை 10 ஆண்டுகள் கிடப்பிலும், அதற்கு முந்தைய காகா கலேல்கா் ஆணைய அறிக்கையை குப்பைத் தொட்டியிலும் போட்டு வைத்திருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசிடமிருந்தே, மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்த ராமதாஸால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் வலிமையாக இருக்கும் போது, சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க முடியும். உத்தரவாதம் அளித்ததா? திமுக 6 முறையும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தான் ஆட்சி அமைத்திருக்கிறது. அப்போதெல்லாம் கூட்டணி கட்சிகளின் தோ்தல் அறிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என்று கூட்டணி கட்சிகளுக்கு உத்தரவாதம் அளித்ததா? தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்து, 2 ஆண்டுகள் முடிகின்றன. முதல்வா் நினைத்திருந்தால் வன்னியா்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றும் முதல்வருக்கு வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. முதல்வருக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி குறித்து பாமகவுக்கு பாடம் நடத்தட்டும் என்று அவா் கூறியுள்ளாா்.