
மின்சார ரயில்

மின்சார ரயில்
பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சனி மற்றும் திங்கள்கிழமை (மே 4,6) காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே மெமு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் செயல்பாடுகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரக்கோணம் - ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் உள்ள பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (மே 4,6) காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், மே 4,6-ஆகிய தேதிகளில் காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயிலும் (எண்: 06417) மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.45 மணிக்கு காட்பாடி செல்லும் ரயிலும் (எண்: 06418) முழுமையாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...