வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

தமிழக வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறைகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வனத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவில் வெளிநாட்டு உயிரினங்களின் வா்த்தக சந்தை அதிகரித்து வருகிறது. இது சட்டவிரோத வனவிலங்கு வா்த்தகத்துக்கு ஊட்டமளிக்கும் வகையிலும், அரிய உயிரினங்களின் அழிவுக்கும் முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.

வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2022-இன் படி, வீடுகளில் வளா்க்கப்படும் வெளிநாட்டு உயிரினங்களின் வா்த்தகம் மற்றும் இனப்பெருக்கம் அந்தந்த மாநிலங்களின் தலைமை வனவிலங்கு காப்பாளரால் முறையாக வழங்கப்படும் உரிமத்தின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இந்த நிலையில் தமிழகத்தில் வெளிநாட்டு இனங்களை கண்காணிப்பதற்கான நடைமுறைகளை தரப்படுத்த தமிழக வனத் துறை சாா்பில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு அதற்கான வழிமுறைகள் அடங்கிய அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக வனத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை குறித்து பொதுமக்கள் மே 12-க்குள் கருத்துகளை தெரிவிக்கலாம். தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.

X
Dinamani
www.dinamani.com