'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

கமல்ஹாசனின் அறிவுரை: மாணவர்களுக்கு வாழ்த்துகள்
கமல்ஹாசன்
கமல்ஹாசன்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகியுள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசன் மாணவர்களுக்கான வாழ்த்துகளைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 95% வென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே, மேற்கல்வி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன உங்கள் முன். அதிலும் கரைதேர்ந்து வாருங்கள். நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம். வெற்றி பெறாத மாணவர்களே, இதை நீங்கள் தோல்வியாகக் கருதத் தேவையில்லை. உங்களுக்கான வெற்றிகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன. உங்களுக்கு என் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் புதிய கிளிம்ஸ் விடியோ மே 8-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கமல்ஹாசன்
தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
கமல்ஹாசன்
கமல்ஹாசன்

புத்தங்களுக்கு மத்தியில் இருக்கிற படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். எப்போதும் வாசகராக அறியப்படும் கமல்ஹாசன் அந்த படங்களில் ஒன்றின் கேப்ஷனில், ‘வாசர்களுக்கு வாழ்த்துகள்’ என லத்தீன் வாசகத்தைப் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com