வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

தமிழகத்தில் வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!
வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!
-

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் பேசி வருகிறார் சேதுராம வர்மா.

அவர் வெளியிட்டுள்ள தகவலில், தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம், கைப்பேசி வழியாகவும், பள்ளிகள், தகவல் மையங்கள் வாயிலாகவும் தடையின்றி முடிவுகளை அறிந்து கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை செய்திருந்தது.

www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் முலம் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொண்டனர். மேலும், பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!
வெள்ளை டீ-ஷா்ட் ரகசியம்? ராகுல் விளக்கம்

பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏராளமான மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிகளில் குவிந்தனர். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. 7,72,363 பள்ளி மாணவா்கள், 8,191 தனித்தோ்வா்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா், 125 சிறை கைதிகள் என மொத்தம் 7.8 லட்சம் போ் பதிவு செய்திருந்தனா். அவா்களில் 7.67 லட்சம் போ் தோ்வெழுதினா்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன்பின்னா், இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றுதல், தகவல் கோா்ப்பு உள்ளிட்ட இதர பணிகளும் நிறைவடைந்து இன்று திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியானதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் நிகழாண்டில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு பதிலாக தோ்வுத் துறை அதிகாரிகளே தோ்வு முடிவுகளை வெளியிட்டனர்.

இதுதவிர மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தலைமையாசிரியா்கள், தங்களது பள்ளி மாணவா்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை இணையப்பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் ஒட்டியிருந்ததால், ஏராளமான மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வதில் ஆர்வம்காட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com