வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?
வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வேலூரில், சாலையோரம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டிருந்த பெண் மீது, கவனக்குறைவாக வந்த இளைஞரின் வாகனம் மோதியதில், கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாநகர் சத்துவாச்சாரி, மந்தவெளி தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதியதில் தூய்மை பணியாளர் விஜயலட்சுமியின் கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?
ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இதுகுறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் வந்த நபர், சாலையோரம் நின்றிருந்த விஜயலட்சுமி மீது வேகமாக மோதியதில் அந்தப் பெண்மணி தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் இடித்ததோடு மட்டுமில்லாமல் கீழே விழுந்த பெண்மணிக்கு என்ன ஆனது என்று கூட கண்டுகொள்ளாமல் மிக அலட்சியமாக செல்லும் சிசிடிவி விடியோ வெளியாகியிருக்கிறது.

அருகிலிருந்த மற்றொரு பெண் ஓடி வந்து விஜயலட்சுமிக்கு உதவி செய்து, அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com