குற்றாலம், கொல்லிமலை உள்ளிட்ட அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. அண்டை மாநிலமான கேரளத்திலும் பல்வேறு பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. இதனால், நாமக்கல் மாவட்டம் மாசிலா அருவி, நம்ம அருவி, ஆகாய கங்கை அருவி, தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும், குளிக்கவும் வனத்துறை தடை விதித்துள்ளது.
மேலும், அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மூணார், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.