பிக் பாஸ் வீட்டில் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து! அர்ச்சனாவுக்காக அருண் நெகிழ்ச்சி!

பிக் பாஸ் வீட்டில் தனது காதலி அர்ச்சனாவுக்கு நடிகர் அருண் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் அருண்/ உள்படம்: அர்ச்சனா
பிக் பாஸ் வீட்டில் அருண்/ உள்படம்: அர்ச்சனாபடம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் வீட்டில் தனது காதலி அர்ச்சனாவுக்கு நடிகர் அருண் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டம் வென்றவர் நடிகை அர்ச்சனா. இம்முறை அவரின் நண்பரும் காதலருமான அருண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

கடந்தமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் அதனை அர்ச்சனாவுக்காக விட்டுக்கொடுத்தவர், இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

கடந்த சீசனில் அர்ச்சனா பட்டம் வென்ற நிலையில், இம்முறை பட்டம் வெல்லும் முனைப்பில் அருண் ஈடுபட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இதனைப் பல இடங்களில் அருண் பதிவிட்டுள்ளார்.

நள்ளிரவில் பிறந்தநாள் வாழ்த்து

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 5வது வாரத்தைக் கடந்துள்ள நிலையில், இம்முறை வீட்டின் கேப்டனாக அருண் தேர்வாகியுள்ளார். இதனால் மற்ற வாரங்களைக் காட்டிலும் கூடுதல் பொறுப்புடன் அருண் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே சின்னத்திரை நடிகை அர்ச்சனா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு நள்ளிரவில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அருண்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிய பிறகு விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு, கேமரா முன்பு வந்து அர்ச்சனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேமரா முன்பு அவர் பேசியதாவது, ''நான் இங்கு நலமாக உள்ளேன். இந்த வாரம் கேப்டனாகியுள்ளேன். இன்று உனது பிறந்தநாள். உனக்கு எல்லாம் வெற்றியாக அமைய வாழ்த்துகள். முன்பு சொன்னதைப் போலவே பிக் பாஸ் கோப்பை உடன் உன்னை விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடியோவை அர்ச்சனா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, என் பிறந்தநாள் முழுமையடைந்துவிட்டது. இதற்காக நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்தேன். இந்த அற்புதமான உணர்வைக் கொடுத்ததற்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com