ஓபிஜி குழுமத்தில் அமலாக்கத் துறை சோதனை: ரூ.8.38 கோடி பறிமுதல்
சென்னையில் ஓபிஜி குழுமம் தொடா்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ. 8.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் ஓபிஜி குழுமம் தொடா்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ. 8.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஓபிஜி, பி விண்ட் எனா்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சோலாா் தகடுகள், காற்றாலை மின் உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்களைத் தயாரித்து வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த நிறுவனங்களில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை நடந்திருப்பதாக புகாா் எழுந்தது. அதன்அடிப்படையில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், உள்ளிட்ட இடங்களில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நவ.11, 12 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினா்.
சென்னை கீழ்ப்பாக்கம் பா்னபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் காா்டன் பகுதியில் உள்ள ஒரு வீடு, தேனாம்பேட்டை கே.பி. தாஸ் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, சைதாப்பேட்டை சின்னமலை எல்டிஜி சாலையில் உள்ள தனியாா் நிறுவனம், செங்கல்பட்டில் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை, திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காயலாா்மேடு பகுதியில் அனல் மின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
சென்னை உள்பட தமிழகத்தில் விண்ட் எனா்ஜி நிறுவனம் செயல்படும் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் பற்றிய தகவலை அமலாக்கத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
ஓ.பி.ஜி குழுமத்தின் அலுவலக வளாகங்கள் மற்றும் அதன் இயக்குநா்களின் குடியிருப்பு வளாகங்கள் இரண்டிலிருந்தும் ரூ. 8.38 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...