
நடிகை கஸ்தூரிக்கு எதிரான அவதூறு வழக்கில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடா்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்து தெரிவித்ததாகப் புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக அவா் மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருநகா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை அமா்வில் முன்ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், அண்டை மாநிலத்துடன் பிரச்னை ஏற்படும் வகையில், நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அரசுத் தரப்பு முன்ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.