கட்சிக்காரர்கள் ஒவ்வொருவரையும் கண்காணித்து வருகிறேன் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதி, திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலரும் காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன் " காட்பாடியில் கட்சிக்காரர்கள் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்து கொண்டுதான் வருகிறேன். போன முறை தேர்தலின் போது கொஞ்சம் ஏமார்ந்துவிட்டேன். இந்த முறை அப்படி நடக்க விடமாட்டேன்.
சில துரோகங்கள் செய்துவிட்டார்கள், அதுவும் எனக்கு தெரியும். அந்த துரோகிகளை கலை எடுத்துவிட்டு தேர்தலை நடத்தும் ஆற்றல் தனக்கு உண்டு. நான் யாரைவேண்டுமானாலும் மன்னித்து விடுவேன் ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்கமாட்டேன்.
என்னையே கொலை செய்ய வந்தாலும் நான் மன்னிப்பேன். ஆனால் என் இயக்கத்தை நான் இருக்கும் இயக்கத்தை 60 ஆண்டுகள் கட்டிகாத்த கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்கவே மாட்டேன் என்று காட்டமாக பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு! பழனிவேல் தியாகராஜன்

ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!

எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன்

நான் இல்லாவிடினும் நான் செய்த சாதனைகள் நிலைத்து நிற்கும்: அமைச்சா் துரைமுருகன்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



