திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சென்னை மேம்பாலத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு

சிவகாத்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடைபெற்று வருகிறது.

News image

சிவகார்த்திகேயன்.

Updated On :15 நவம்பர் 2024, 5:57 pm IST

சிவகாத்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன், பெருங்களத்தூர், வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதிப்பது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதனைக் காண ஏராளமானோர் அங்கு கூடியதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பான விடியோ இணையளத்தில் வைரலாகி வருகிறது. அமரன் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க, படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இன்னும் பெயரிடாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுதவிர சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, சுதா கொங்கரா படம் என அடுத்தடுத்த படங்களிலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கும் படத்துக்கு ‘புறநானூறு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது ஜி.வி.பிரகாஷ் குமாரின் 100வது படமாகும். இதனிடையே தற்போது சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.