மாநகரப் பேருந்துகளில் 20 கிலோ எடை வரையிலான பொருள்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பொருள்களுக்கான சுமைக்கட்டணம் குறித்து பயணிகளிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்ட பிறகு, மாநகரப் பேருந்துகளில் சுமை கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நடத்துநர்களுக்கு மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களுக்கான சுமைக் கட்டணம் குறித்து பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் / புகார்களின் அடிப்படையில் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு (Luggage), சுமைக்கட்டணம் வசூலிக்கும் போது கீழ்கண்ட விதிமுறைகளை பயணிகளிடம் நடத்துநர்கள் பின்பற்ற வேண்டும்.
தோள்களில் மாட்டி செல்லக்கூடிய பைகள், துணிகள் அடங்கிய கைப்பெட்டிகள்/ பைகள், கேமிரா போன்ற கையடக்கமான சாதனங்கள், Laptops, சிறிய அளவிலான கையில் எடுத்து செல்லதக்க மின் சாதன பொருட்கள் போன்றவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் (Wheel Chair), கலை நிகழ்ச்சிக்கு செல்லும் நாட்டுப்புற கலைஞர்கள் கொண்டு செல்லும் வாத்திய கருவிகள் முதலியவைகளும் இலவசமாக ஏற்றிச்செல்ல கூடிய சுமைகளாகும்.
மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் தங்கள் உடமைகளை எடுத்துச்செல்ல டிராலி வகையான சூட்கேஸ்கள் அதிகபட்சமாக 65cm (Medium Size) அளவுள்ள சூட்கேஸ்கள் மற்றும் பைகள் ஆகியவைகளை கட்டணமின்றி பயணிகள் எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம்.
ஒரு பயணி சொந்த உபயோகத்திற்கான 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம்.
பயணிகள் எடுத்துவரும் 65cm (Large size) அளவிற்கு மேல் உள்ள டிராலி வகையான சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகள், 20 கிலோவிற்கு மேல் எடையுள்ள சுமைகளுக்கு 1 பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
20 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் சுமைக்களுக்கு பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது.
பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைககளை அனுமதிக்கக் கூடாது.
சக பயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது.
பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக் கூடாது.
செய்தித்தாள்கள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல, முன் அனுமதி பெற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தங்கம் விலை 9% சரிவு! நிபுணர்கள் கூறுவது என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மின்னணு பயணச் சீட்டு வழங்கும் கருவிகள் முடங்கியதால் பேருந்து பயணிகள் அவதி

சென்னை மாநகரப் பேருந்து பயணிகள் கவனத்திற்கு...

சேலம் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: பொதுமக்கள் கோரிக்கை

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: புகாா் தெரிவிக்க எண்கள் வெளியீடு
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

