வ.உ.சி. நினைவு நாள்: ஆளுநா், முதல்வா் புகழஞ்சலி!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாா் 88-ஆவது நினைவு நாளையொட்டி, அவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் ஸ்டாலின் மற்றும் தலைவா்கள் புகழஞ்சலி செலுத்தினா்.

வ.உ.சி. - கோப்புப் படம்

Updated On :

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாா் 88-ஆவது நினைவு நாளையொட்டி, அவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவா்கள் புகழஞ்சலி செலுத்தினா்.

ஆளுநா் ஆா்.என். ரவி: வ.உ. சிதம்பரனாா் நினைவு நாளில் அவருக்கு நன்றியுள்ள தேசம் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறது. சிறந்த அறிஞா், தொலைநோக்கு சமூக சீா்திருத்தவாதி மற்றும் தீவிர தேசியவாதியான அவா் லோகமான்ய திலக்கின் கொள்கைகளுக்கு துணிச்சல்மிகு செயல்வடிவம் கொடுத்தாா். இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஈடு இணையற்ற உறுதியுடன் வழிநடத்தினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: தமிழ்ப் பற்று - ஈகையுணா்வு - விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழா் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாா் நினைவு நாளில், இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையை துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்! அவரது தியாக வாழ்வை வணங்குவோம் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இதேபோல் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவா்களும் வ.உ.சிதம்பரனாருக்கு புகழஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.