ஆவடி ரயில் நிலையத்தில் மந்தகதியில் ’நகரும் படிக்கட்டு பணி'

​ஆ​வடி ரயில் நிலை​யத்​தில் பய​ணி​க​ளின் வச​திக்​காக அமைக்​கப்​பட்டு வரும் நக​ரும் படிக்​கட்டு (எஸ்​க​லேட்​டர்) பணி மந்​த​க​தி​யில் நடை​பெற்று வரு​கி​றது
ஆவடி ரயில் நிலையத்தில் மந்தகதியில் ’நகரும் படிக்கட்டு பணி'
ஆவடி ரயில் நிலையத்தில் மந்தகதியில் ’நகரும் படிக்கட்டு பணி'
Published on
Updated on
1 min read

​ஆ​வடி ரயில் நிலை​யத்​தில் பய​ணி​க​ளின் வச​திக்​காக அமைக்​கப்​பட்டு வரும் நக​ரும் படிக்​கட்டு (எஸ்​க​லேட்​டர்) பணி மந்​த​க​தி​யில் நடை​பெற்று வரு​கி​றது. இத​னால், நடை​மேம்​பா​லம் மீது ஏற​மு​டி​யாத பய​ணி​கள் சிர​ம​ம​டைந்து வரு​கின்​ற​னர்.

சென்னை சென்ட்​ரல் - அரக்​கோ​ணம் வழித்​த​டத்​தில் உள்ள ஆவடி ரயில் நிலை​யம் முக்​கிய ரயில் நிலை​ய​மாக திகழ்​கி​றது. மாந​க​ராட்​சி​யாக தரம் உயர்த்​தப்​பட்ட ஆவ​டி​யில், போர் தள​வா​டங்​கள் தயா​ரிக்​கும் தொழிற்​சா​லை​கள், அண்​ண​னூர் ரயில்வே பணி​மனை, இந்​திய உணவு கழ​கம் மற்​றும் தமிழ்​நாடு சிறப்​புக் காவல் படை, மத்​திய ரிசர்வ் போலீஸ் படை, விமா​னப்​படை, ஆகி​ய​வற்​றின் பயிற்சி மையங்​க​ளும், அரசு மற்​றும் தனி​யார் பள்​ளி​கள் மற்​றும் கல்​லூ​ரி​கள் உள்​ளன.

ஆவடி ரயில் நிலை​யத்தை தின​மும் 1 லட்சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயன்​ப​டுத்தி சென்று வரு​கின்​ற​னர். இந்த ரயில் நிலை​யத்​தில் 4 நடை​மேடைகள் (பிளாட்ஃ​பார்ம்) உள்​ளன.

பொது​மக்​கள் பேருந்து நிலை​யத்​துக்​குச் செல்​லவோ அல்​லது மார்க்​கெட்​டுக்கு செல்​லவோ ரயில் நிலைய கட​வுப் பாதையை (ரயில்வே கேட்) க​டந்​து​தான் செல்ல வேண்​டும். இவ்​வாறு கட​வுப் பாதையை கடந்து செல்​லும் போது, கடந்த பல ஆண்​டு​க​ளில் ரயி​லில் அடி​பட்டு நூற்​றுக்​க​ணக்​கா​னோர் உயி​ரி​ழந்​துள்​ள​னர்.

இதைத் தடுக்​கும் வகை​யில், புதிய நடை​மேம்​பா​லம் அண்​மை​யில் கட்டப்​பட்​டது. அத்​து​டன், கட​வுப் பாதை வழி​யும் சுவர் அமைத்து மூடப்​பட்​டது. இத​னால், பொது​மக்​கள் ரயில் நிலை​யத்​தின் ஒரு புறத்​தில் இருந்து மற்​றொரு புறத்​துக்​குச் செல்ல நடை​மேம்​பா​லத்​தைப் பயன்​ப​டுத்தி வரு​கின்​ற​னர்.

ஆனால், இந்த நடை​மேம்​பா​லம் மிக உய​ர​மாக இருப்​ப​தால், வய​தா​ன​வர்​கள், கர்ப்​பி​ணி​கள், மாற்​றுத்​தி​ற​னா​ளி​கள் கடும் அவ​திப்​பட்டு வரு​கின்​ற​னர். பய​ணி​க​ளும் நடை​மேம்​பா​லத்​தில் ஏற மிக​வும் சிர​மப்​பட்டு வந்​த​னர். இந்​நி​லை​யில், பய​ணி​க​ளின் வச​திக்​காக நக​ரும் படிக்​கட்​டு​கள் (எஸ்​க​லேட்​டர்) அமைக்​கும் பணி சில மாதங்​க​ளுக்கு முன்பு தொடங்​கப்​பட்​டது. 1, 2-ஆவது மற்​றும் 4-ஆவது நடை​மே​டை​க​ளில் நக​ரும் படிக்​கட்​டு​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இப்​ப​ணி​கள் மந்த கதியில் நடை​பெற்று வரு​வ​தால் பய​ணி​கள் மிகுந்த சிர​மத்​துக்​குள்​ளாகி வரு​கின்​ற​னர். இது குறித்து ரயில்வே அதி​கா​ரி​கள் கூறி​யது:

ஆவடி ரயில் நிலை​யத்​தில் 1 மற்​றும் 4-ஆம் நடை​மே​டை​க​ளில் நக​ரும் படிக்​கட்​டு​கள் அமைக்​கும் பணி இறு​திக் கட்டத்தை எட்டி​யுள்​ளது. இந்த மாதம் இறு​தி​யில் அல்​லது அடுத்த மாதம் தொடக்​கத்​தில் பொது​மக்​க​ளின் பயன்​பாட்​டுக்கு திறக்​கப்​ப​டும். இரண்​டா​வது நடை​மே​டை​யில் மட்டும் நக​ரும் படிக்​கட்​டு​கள் அமைக்​கும் பணி சற்று கால​தா​ம​த​மா​கும் என்​ற​னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com