மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கையும்களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்!

வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் வருவாய் ஆய்வாளர் கையும்களவுமாக சிக்கியுள்ளார்.

வருவாய் ஆய்வாளர் கார்த்தி

Published On :

வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் வருவாய் ஆய்வாளர் கையும்களவுமாக சிக்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.

வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்பட்ட பெரிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் ஓடைப் பகுதி ஆக்கிரமிப்பை எடுக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த மனுவின் அடிப்படையில் ஓடைப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற யோகேஸ்வரனிடம் வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கின் உதவியாளர் முருகன் மணியின் மூலம் 15,000 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.

லஞ்சம் வாங்கும்போது சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், வருவாய் ஆய்வாளரை கையும்களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.