மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) நேரில் சென்று நலம் விசாரித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
நுரையீரல் சளி காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள அவருக்கு மருத்துவக் குழுவினா் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியனும் உடனிருந்தார்.
முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, ஈவிகேஎஸ் இளங்கோவன் விரைந்து குணமாகி வருவதாகவும் மருத்துவர்களும் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி சட்டப்பேரவை நிகழ்வில் அவர் பங்கேற்பார் எனவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சோனியா காந்தி விரைந்து நலம் பெற விழைகிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு

திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

மீண்டும் மருத்துவமனையில் பஞ்சாப் முதல்வர்: ஆம் ஆத்மி தலைவர் நலம் விசாரிப்பு!
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

