சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து ஒரு சவரன் ரூ. 56,800-க்கு விற்பனையாகி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த வாரத் தொடக்கம்முதல் தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில், புதன்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 56,800-க்கு விற்கப்பட்டது.
மீண்டும் ஏற்றம்
இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ. 56,880-க்கும், ஒரு கிராம் ரூ. 7,110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் தங்கமும் ரூ. 80 உயர்ந்து ரூ. 60,520-க்கும், ஒரு கிராம் ரூ. 7,565-க்கும் புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








