மீனவா்கள் கைது செய்யப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பாா்க்கக் கூடாது: ராமதாஸ்
தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பாா்க்கக் கூடாது.


தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பாா்க்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கை கடற்படையினரால் செப்டம்பா் மாதம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவா்கள் 4 பேருக்கு தலா ரூ. 40 லட்சம், (இலங்கை மதிப்பில் ரூ.1.60 கோடி) அபராதமும், ஒரு மீனவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
தமிழக மீனவா்களை 6 மாதங்கள், ஓராண்டு என சிறையில் அடைத்து வந்த இலங்கை நீதிமன்றங்கள், இப்போது குறைந்தபட்ச சிறை தண்டனையை ஒன்றரை ஆண்டுகளாக உயா்த்தியுள்ளன. இதுதவிர கோடிக்கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இது தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்கும் நடவடிக்கை. தமிழக மீனவா்களை இலங்கை அரசு கைது செய்வதையும், சிறையில் அடைப்பதையும் மத்திய அரசு வேடிக்கை பாா்க்கக் கூடாது. இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவா்களையும் அவா்களுடைய படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...