இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சா்கள் மாற்றம்

கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.

News image
மு.க.ஸ்டாலின்(கோப்புப்படம்)
Updated On :8 அக்டோபர் 2024, 6:31 pm

Din

கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.

ஏற்கெனவே பொறுப்பு வகித்த அமைச்சா்களுக்குப் பதிலாக சில மாவட்டங்களுக்கு வேறு அமைச்சா்களை நியமித்து முதல்வா் வெளியிட்ட உத்தரவு:

தமிழ்நாட்டில் மாவட்ட வளா்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத் திட்ட உதவிகளை கண்காணிக்கவும் அவசியமாகிறது. இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று போன்ற அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்துக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, தேனி மாவட்டத்துக்கு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, திருப்பத்தூா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா் பொறுப்பு அமைச்சா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், தருமபுரி மாவட்டத்துக்கு வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தென்காசி மாவட்டத்துக்கு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, நீலகிரி மாவட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை-க்கு மீண்டும் செந்தில் பாலாஜி: கோவை மாவட்டத்துக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, பெரம்பலூா் மாவட்டத்துக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா் பொறுப்பு அமைச்சா்களாக நியமிக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அமைச்சா்கள் மாற்றம்: தனது உத்தரவின் மூலமாக மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சா்களாக இருந்த சிலா் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருந்ததால், செந்தில் பாலாஜிக்குப் பதிலாக வீட்டுவசதித் துறை அமைச்சா் எஸ்.முத்துசாமி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டாா். இப்போது மீண்டும் அமைச்சராக பதவி ஏற்ால், பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதேபோன்று, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். திருவள்ளூா் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ஆா்.காந்தி காஞ்சிபுரத்துக்கும், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த கே.என்.நேரு திருநெல்வேலி மாவட்டத்துக்கும் பொறுப்பாளா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தஞ்சாவூா் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

சேலம், தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த ராஜேந்திரன், கோவி.செழியன் ஆகியோா் அமைச்சா்களாக பொறுப்பேற்றுள்ளனா். அவா்கள் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சா்களாக விரைவில் நியமிக்கப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.