திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக வானத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்து வந்தது. இந்த நிலையில் ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு மாலை 5.40 க்கு புறப்பட்ட விமானம் பறக்கத் தொடங்கியவுடன் சக்கரங்களை உள் இழுக்க முடியாமல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானிகள் மீண்டும் தரையிறக்கப்பட்ட முடிவு செய்தனர்.
விமான நிலைய அதிகாரிகள் இரவு 8.15 மணிக்கு தரையிறக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்படி சரியாக இரவு 8.15 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
மாலை 5.40 மணிக்கு திருச்சியில் புறப்பட்ட விமானம் திருச்சி மாவட்டம் அன்ன வாசல், ராப்பூசல் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக 25 க்கும் மேற்பட்ட முறைகள் வட்டமடித்ததால் விமானத்தில் இருந்த பயணிகள் குறித்து அச்சம் ஏற்பட்டது. விமானம் 2.30 மணி நேரத்துக்கும் மேலாக வட்டமடித்துள்ளது.
விமானத்தில் இருந்த 141 பேர் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.