தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ரயில் விபத்து: சீரமைப்பு பணிகள் எப்போது முடிவடையும்? தெற்கு ரயில்வே தகவல்

இன்று மாலை முதல் பொன்னேரி - கவரப்பேட்டை வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது...

News image
தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அப்புறப்படுத்தப்படும் காட்சி- ANI
Updated On :12 அக்டோபர் 2024, 1:20 am

DIN

கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு விபத்துக்குள்ளான மைசூரு - தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலில்(12578) தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Story image

இந்த நிலையில், ரயில் விபத்து குறித்து விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுடன் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், மொத்தம் 22 பெட்டிகளைக் கொண்ட தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்து ஏற்பட்ட வழித்தடத்தில், சுமார் 15 - 16 மணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்கள் வழக்கம்போல மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ரயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று (அக். 12) மாலை முதல் பொன்னேரி - கவரப்பேட்டை வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்டவாள சீரமைப்பு பணிகளில் 5 கிரேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில்வே பணியாளர்கள் 250 பேர், பேரிடர் மீட்புக் குழுக்களைச் சேர்ந்த 100 பேர் என மொத்தம் சுமார் 350 பேர் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.