மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முக்கிய மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை!

முக்கிய மெட்ரோ நிலையங்களைச் சுற்றி மழை நீர் தேங்க வாய்ப்பு...

News image
- படம் | சென்னை மெட்ரோ எக்ஸ் தளம்
Updated On :15 அக்டோபர் 2024, 12:58 pm

DIN

சென்னை மாநகரில் உள்ள முக்கிய மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மெட்ரோ, பரங்கிமலை மெட்ரோ, அரும்பாக்கம் மெட்ரோ நிலையங்களிலுள்ள வாகன நிறுத்துமிடங்களில் இன்று(அக்.15) முதல் வியாழக்கிழமை(அக்.17) வரை பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ நிலையங்களைச் சுற்றி மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரங்கிமலை மெட்ரோ நிலையத்தை இணைக்கும் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து பரங்கிமலை மெட்ரோ நிலையத்துக்கு செல்லும் பயணிகள் பரங்கிமலை புறநகர் ரயில் நிலையத்திலுள்ள நடை மேம்பாலத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பரங்கிமலை மெட்ரோ நிலையத்தை சென்றடைய இயலாத பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தை பயன்படுத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோயம்பேடு புறநகர் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து கோயம்பேடு மெட்ரோ நிலையத்துக்கு செல்லும் பயணிகள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரோஹிணி திரையரங்கம் பக்கத்திலுள்ள நடை மேம்பாலத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மெட்ரோ ரயில் நிலைய பயணிகள் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

1800 425 1515

பெண்களுக்கான உதவி எண்கள் - 155370

மேற்கண்ட எண்களில் தொடர்புகொள்ள பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.