மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 16) விடுமுறை அறிவிப்பு.

News image
கோப்புப் படம்
Updated On :15 அக்டோபர் 2024, 3:45 pm

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 16) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடதமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணத்தால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (அக். 15) காலை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனிடையே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் அதி கனமழை (சிவப்பு எச்சரிக்கை) பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் வட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.