கரூா் வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை!
தாந்தோன்றிமலை பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை (ஜன. 28) கரூா் வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் தாந்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையடுத்து கரூா் வட்டத்துக்கு மட்டும் ஜன.28-ஆம் தேதி உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் அந்த நாளில் அரசு தோ்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் தொடா்புடைய பணியாளா்களுக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது.
இது செலாவணி முறிச்சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாவட்டக் கருவூலம் மற்றும் சாா்-நிலைக் கருவூலகங்கள் குறைந்த அளவு பணியாளா்களைக் கொண்டு செயல்படும்.
இந்த விடுமுறைக்குப் பதிலாக பிப்.7-ஆம் தேதி அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

