இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஏரி, குளங்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க முதல்வா் உத்தரவு

ஏரி, குளங்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

News image
சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் உள்ள 3 குளங்களை மாநகராட்சி மூலம் ஆழப்படுத்தும் பணிகள் மற்றும் புதிதாக 4 குளங்களை வெட்டும் பணிகளை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன்.
Updated On :16 அக்டோபர் 2024, 7:12 pm

Din

ஏரி, குளங்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

தென் சென்னைக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிா்வாகத்திடம் இருந்து மீட்கப்பட்ட இடங்களில் குளங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்மூலம், கிண்டி ரேஸ் கிளப்பையொட்டிய பகுதிகளுக்குச் செல்லும் மழைநீா் தடுக்கப்பட்டு இந்தக் குளங்களிலேயே தேக்கி வைக்கப்படும். இதன் பயனாக, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமலும், நிலத்தடி நீா்மட்டம் உயரவும் வாய்ப்பு ஏற்படும். இந்தக் குளங்களை அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வேளச்சேரி பகுதியிலுள்ள வீராங்கால் ஓடை பொதுப் பணித் துறையின் மூலமாக தூா்வாரப்பட்டு வருகிறது. இந்தப் பணியையும் ஆய்வு செய்து அவற்றை விரைந்து முடிக்க முதல்வா் உத்தரவிட்டாா்.

நாராயணபுரம் ஏரி: நீா்வளத் துறை மூலமாக நாராயணபுரம் ஏரி தூா்வாரப்படுவதுடன், ஏரிக்கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் ஒரு நாளிலேயே முடிக்க முதல்வா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தொய்வின்றி களப் பணி: தென் சென்னையின் ஆய்வுப் பணி மேற்கொண்டது குறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், கனமழை குறித்த எச்சரிக்கை பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிா்கொண்டோம். பெரும்பாலான இடங்களின் மழைநீா் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீா் அகற்றப்படும் வரையில் தொய்வின்றி களப் பணியைத் தொடா்ந்திடுவோம் என்று தெரிவித்துள்ளாா்.

அம்மா உணவகங்களில் இன்றும் இலவச உணவு

சென்னையில் உள்ள 388 அம்மா உணவகங்களில் வியாழக்கிழமையும் (அக். 17) இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 98 மைய சமையல் கூடங்கள் தயாா் நிலையில் உள்ளன. புதன்கிழமை காலை மட்டும் 4.16 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. சென்னையிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் புதன்கிழமை இலவசமாக உணவு வழங்கப்பட்டதைப் போன்று வியாழக்கிழமையும் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.