காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது: எல்.முருகன்

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

News image
எல்.முருகன்.
Updated On :20 அக்டோபர் 2024, 10:26 am

DIN

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் கொண்டாடிய ஆயுத பூஜை விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முழுவதும் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் எடுத்துக்காட்டாக தான் இன்று ஆட்டோ சங்கத்தினர் ஆயுத பூஜையை கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆன்மீகம் மற்றும் தேசத்தின் பக்கம் மக்கள் நிற்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியவர்கள் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டு உள்ளனர். அதற்காக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீது குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல. ஆளுநர் மீது திமுக தலைவர் திட்டமிட்டு குற்றச்சாட்டை வைக்கிறார். தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் பிரதமர் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் பாஜக தமிழுக்கு எதிரானது போல் கருதாக்கத்தை உருவாக்க திமுக முயற்சி செய்து வருகிறது. திமுக அரசு சென்னை வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பதை விட்டு விட்டு மக்களை திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது. யாரும் இந்தியை திணிக்கவில்லை, கட்டாயமும் படுத்தவில்லை. விரும்பினால் இன்னொரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது.

அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த திருமாவளவன் எப்படி மொத்த தலித் மக்களுக்கான தலைவராக இருக்க முடியும்?. அவர் இரட்டை வேடம் போட்டுகிறார். விசிக என்பது ஒரு சின்ன கட்சி, அதனை நான் சிறிய கட்சியாக பார்க்கிறேன். திருமாவளவன் முதல்வர் ஆகுவது என்பது நடக்காது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.