தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என துணை முதல்வர் உதயநிதிக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் கிரிவலம் போக வில்லை, சரி வலம் தான் போனதாக பதிவிட்டு உள்ளார். இடம் போய் கொண்டு இருந்தவர்கள் வலம் போக ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதுவே ஆன்மிகத்தின் மிகப்பெரிய வெற்றி தான்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூறி உள்ளார். தேர்தல் ஜனநாயகத்தில் யாரும் நிராகரிப்பட்டவர்கள் கிடையாது. 3 லட்சம் பேர் ஒட்டு போட்டு அங்கீகரித்து உள்ளார்கள். ஆன்மிகமும் அரசியலும் தமிழகத்தில் கலக்கவே கலக்காது என்கிறார் உதயநிதி. சவால் விடுகிறேன் தமிழகத்தில் ஆன்மிகமும் அரசியலும் கலக்கத் தான் செய்யும்.
அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்தது தமிழ். பெரியார் வளர்த்தது தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்தது தமிழ். 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி முழுமையாக இருக்காது. திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்கிறார். உதயநிதியை தயார் செய்வதால் அங்கு சமூக நிதி இல்லை. பிறகு திருமாவளவனுக்கு அங்கீகாரம் எங்கே கிடைக்கும்.
கம்யூனிஸ்டு கட்சியினர், சாம்சங் தொழிலாளர்களுக்காக போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளனர். ஆட்சியை எதிர்த்து பாட ஆரம்பித்து விட்டார்கள். கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி திமுக கட்சியிலேயே பிரச்னைகள் இருக்கின்றன. 2026ம் ஆண்டு தேர்தல் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
திமுக கூட்டணி தோல்வியை சந்திக்கும்: தமிழிசை சௌந்தரராஜன்
ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!

”அம்மா வேண்டாம்! அக்கா போதும்!” தொண்டர்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்!

அம்மா வேண்டாம், அக்கா என்றால் போதும்: தமிழிசை கலகலப்பு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

