திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழ்நாட்டின் டாப் 10 தொடர்கள்!

தமிழ்நாட்டில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தொடர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

News image

சின்னத்திரை தொடர்கள்

Updated On :24 அக்டோபர் 2024, 4:39 pm IST

தமிழ்நாட்டில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தொடர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை தொடர்கள் பெற்ற டிஆர்பி புள்ளிகளின் அடிப்படையில் இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

காலமாற்றத்துக்கேற்ப, சின்னத்திரை தொடர்கள் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சினிமாவுக்கு இணையாக மெனக்கெடல் காட்சிகளும் வைக்கப்படுகின்றன.

ஆண்கள், இளைஞர்கள் உள்பட பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் தொடர்களைப் பார்ப்பதால், சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி புள்ளிகளும் அதிகரித்து வருகின்றன.

கயல் தொடர் முதலிடத்தில் உள்ளது. சன் தொலைக்காட்சியில் கயல் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 11.08 புள்ள்கள் பெற்று டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

2வது இடத்தில் மூன்று முடிச்சு தொடர். இத்தொடரும் சன் தொலைக்காட்சியில்தான் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் ஸ்வாதி கொண்டே, நியாஸ் கான் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 9.76 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

3வது இடத்தில் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. இத்தொடரும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. மணீஷா மகேஷ் - அமல்ஜித் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 9.17 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

4வது இடத்தில் மருமகள் தொடர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் கேப்ரியல்லா சார்ல்டன் - ராகுல் ரவி முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். மருமகள் தொடர் 8.97 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

5வது இடத்தில் சுந்தரி தொடர் உள்ளது. இத்தொடரும் சன் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகிறது. சுந்தரி தொடரில் கேப்ரியல்லா - ஜிஸ்ணு மேனன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. சுந்தரி தொடர் 8.29 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

6வது இடத்தில் ராமாயணம் உள்ளது. சன் தொலைக்காட்சியில் இந்த இதிகாசத் தொடர் ஒளிபரப்பாகிறது. ஹிந்தியில் ஒளிபரப்பான இந்தத் தொடர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. டெபினா பானர்ஜி சீதையாக நடிக்கிறார். குர்மீட் செளத்ரி ராமனாக நடிக்கிறார். ராமாயணம் தொடர் 8.29 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

7வது இடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இத்தொடர் ஒளிபரப்பாகிறது. இத்தொடரில் கோமதி பிரியா - வெற்றி வசந்த் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 7.02 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

8வது இடத்தில் மல்லி தொடர் உள்ளது. இத்தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. விமல் வெங்கடேசன் - நிகிதா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 6.71 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

9வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் உள்ளது. இத்தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, வசந்த் வசி, ஆகாஷ், ஹேமா உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 6.10 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

10வது இடத்தில் சின்ன மருமகள் தொடர் உள்ளது. இத்தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நவீன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். டிஆர்பி பட்டியலில் 5.54 புள்ளிகளை இத்தொடர் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.