6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட.. உங்கள் விஜய் தயார்..!

மேடை ஏறிய விஜய் தற்போது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

News image
Updated On :27 அக்டோபர் 2024, 5:34 pm

DIN

அரசியல் பெரிய அகழி, உன்னால் தாக்குப்பிடிக்க முடியுமா? எப்படி கரை சேருவாய் என்று அச்ச உணர்வை ஏற்படுத்தினார்கள் என்று விஜய் பேசியுள்ளார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (அக். 27) நடைபெறுகிறது.

மேடை ஏறிய விஜய் தற்போது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அவர் பேசியதாவது, “எனது உடன்பிறந்த சகோதரி வித்யா சிறு வயதில் மரணமடைந்தபோது மீளாத் துயரடைந்தேன். என்னுள் அந்த மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதேபோலத்தான், சகோதரி அனிதா மரணமடைந்தபோதும் உணர்ந்தேன். அனிதா எனது சகோதரியை போன்றவர். நீட் தேர்வு முறை இருந்ததால்தான், எல்லா தகுதியும் இருந்தும் அனிதா உயிரிழக்க நேரிட்டது. இதை எதிர்க்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக போராட உங்க விஜய் தயார்!” என்று விஜய் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.