/

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்காக ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :28 அக்டோபர் 2024, 9:49 am

DIN

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலர் (போக்குவரத்து துறை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கிட 29/03/2023 அன்று உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடும் நிதி நெருக்கடியிலும், தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முதல்வர், கருணை உள்ளத்தோடு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.