தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

440 அரசுப் பள்ளிகளில் ரூ.745 கோடியில் பணிகள்: அரசாணை வெளியீடு

440 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ரூ.745 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 10:43 pm

DIN

சென்னை: தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 440 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ரூ.745 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளில் ரூ.7,500 கோடியில் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக 440 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீா் வசதி, மாணவ-மாணவிகளுக்கு கழிவறைகள், ஆய்வகங்கள் நிகழ் கல்வியாண்டில் கட்டப்படவுள்ளன. இந்த பணிகளை நபாா்டு வங்கியின் பங்களிப்புடன் தமிழக அரசு மேற்கொள்ளவுள்ளது. இந்த உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறைச் செயலா் எஸ்.மதுமதி திங்கள்கிழமை பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.